Paytm அறிமுகப்படுத்திய டிஜிட்டல் தங்க நாணயம் - ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கிடைக்கும்
பேடிஎம் (Paytm) நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி, பேடிஎம் ஆப்பில் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பயனர்களுக்கு “Gold Coins” எனப்படும் டிஜிட்டல் தங்கம் வழங்கப்படும்.
இந்த முயற்சி, தினசரி பரிவர்த்தனைகளை நீண்டகால சேமிப்பாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
UPI பரிவர்த்தனைகள், QR Scan & Pay, ரீசார்ஜ், பில் கட்டணம், பணம் பரிமாற்றம் போன்ற eligible payments அனைத்திலும் பயனர்கள் உறுதியான Gold Coins பெறுவார்கள்.

மேலும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் வழியாக செலுத்தும் போது கூட இந்த நாணயங்கள் வழங்கப்படும். குறிப்பாக RuPay கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இரட்டிப்பு பரிசுகள் கிடைக்கும்.
பேடிஎம் தெரிவித்ததாவது, Gold Coins என்பது சாதாரண cashback-க்கு மாற்றாக, மதிப்பு குறையாமல் நீண்டகாலத்தில் வளரக்கூடிய டிஜிட்டல் தங்கமாகும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும், பயனர்கள் ஆப்பில் scratch card-ஐ திறந்து தங்கள் Gold Coins-ஐ பெறலாம். பின்னர், அவற்றை நேரடியாக டிஜிட்டல் தங்கமாக மாற்றிக் கொள்ளலாம்.
மோர்கன் ஸ்டான்லி அறிக்கையை மேற்கோள் காட்டிய பேடிஎம், இந்திய குடும்பங்கள் தற்போது 3.8 டிரில்லியன் டொலர் மதிப்பிலான தங்கத்தை வைத்திருப்பதாகவும், இது இந்தியாவின் GDP-யின் 89 சதவீதம் எனவும் குறிப்பிட்டது.
இதன் மூலம், தங்கம் இந்தியர்களுக்கு தலைமுறை தோறும் நம்பிக்கைக்குரிய சொத்தாக இருப்பதை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த புதிய முயற்சி, பயனர்களுக்கு தினசரி பரிவர்த்தனைகளில் சேமிப்பு உணர்வை ஏற்படுத்துவதோடு, இந்தியாவின் தங்க சந்தையில் டிஜிட்டல் மாற்றத்தையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Paytm Gold Coins rewards, Paytm digital gold scheme 2025, Paytm UPI cashback gold, Paytm QR Scan & Pay benefits, Paytm RuPay credit card offers, Paytm gold savings program, Paytm digital gold investment news, Paytm new feature November 2025, Paytm gold coins scratch card