ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணய rewards வழங்கும் Paytm.., எவ்வாறு செயல்படும்?
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் Paytm தங்க நாணய வெகுமதிகளை வழங்குகிறது.
Gold coin rewards
பயனர்கள் இனி Paytm மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு தங்க நாணய வெகுமதிகளைப் பெறுவார்கள். Paytm One 97 Communications Limited, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பயனர்களுக்கு தங்க நாணயங்களை வெகுமதி அளிக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நாணயங்களை டிஜிட்டல் தங்கமாக மாற்ற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. scan மற்றும் pay, online shopping, money transfers, recharges, bill payments, recurring payments உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த அம்சம் பொருந்தும்.
மேலும், UPI, debit cards, credit cards, அல்லது net banking மூலம் பணம் செலுத்தினாலும் பொருந்தும்.
credit cards மற்றும் RuPay கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் UPI payments-களுக்கு இரட்டிப்பு தங்க நாணயங்கள் வழங்கப்படும்.
இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. பயனர்கள் படிப்படியாக டிஜிட்டல் தங்கத்தை குவித்து, தங்கள் செலவினங்களை சேமிப்பு மற்றும் நீண்ட கால முதலீடாக மாற்ற அனுமதிப்பதே இதன் யோசனை.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பயனர்கள் பரிவர்த்தனை தொகையில் 1% தங்க நாணயங்களாகப் பெறுவார்கள் என்று நிறுவனம் கூறியது.
உதாரணமாக, ரூ.10,000 செலவழித்தால் 100 தங்க நாணயங்கள் கிடைக்கும். ரூ.1.5 லட்சம் செலவழித்தால் 1,500 தங்க நாணயங்கள் கிடைக்கும்.
இதன் மூலம் ரூ.1.5 லட்சம் செலவுகளுக்கு 0.01% கேஷ்பேக் அல்லது ரூ.15 மதிப்புள்ள தங்கம் கிடைக்கும். ஆனால் பணமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |