பாகிஸ்தானின் தோல்வியை பார்க்க முடியாமல் மைதானத்தை விட்டு ஓடிய அமைச்சர்
பாகிஸ்தானின் தோல்வியை பார்க்க முடியாமல் உள்துறை அமைச்சர் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் தோல்வி
2026 T20 உலக கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.

இந்தியா உடன் விளையாட மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஐசிசியின் கடும் அழுத்திற்கு பின்னர் விளையாட சம்மதம் தெரிவித்தது.
ராளமான ரசிகர்களுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய(PCB) தலைவருமான மொஹ்சின் ராசா நக்வி உள்ளிட்டோர் மைதானத்திற்கு வந்து நேரில் போட்டியை கண்டுகளித்தனர்.

இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.
176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய உஸ்மான் கான் தவிர அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

18 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 114 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாதியிலே கிளம்பிய நக்வி
இதனிடையே பாகிஸ்தானின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி என்றான நிலையில், போட்டி முடியும் முன்பே மொஹ்சின் நக்வி மைதானத்தில் இருந்து கிளம்பிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
VIDEO | ICC Men's T20 World Cup, 2026: PCB chief Mohsin Naqvi leaves R. Premadasa International Stadium. #INDvsPAK
— Press Trust of India (@PTI_News) February 15, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/QXbYcjFUCN
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் சிறப்பாக விளையாடாத பாகிஸ்தான் மூத்த வீரர்களையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, ஷதாப் கான் போன்ற மூத்த வீரர்கள் முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து சொதப்புனாலும் இவர்களுக்கு ஏன் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படுகிறது?

உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதி இல்லாத ஒருவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான்.
திறமை இல்லாத ஒருவரிடம் பதவியைக் கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார். நக்விக்கு வாரியத்தை எப்படி நடத்துவதென்றே தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |