ஐபிஎல் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அமைச்சர்?
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி கலந்து கொள்ள விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அமைச்சர்?
கத்தார் தலைநகர் தோகாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐசிசி வாரிய கூட்டம், அங்குள்ள போர் சூழல் காரணமாக இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் மே 30 மற்றும் 31 ஆம் திகதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இதே போல், மே 31 ஆம் திகதி பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐசிசி வருடாந்திர கூட்டத்திற்கு பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டியையும் கண்டுகளிக்க உள்ளனர்.
இதே போல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்விக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் உள்ளார்.

ஆனால், அவர் இந்தியா வருவது குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பே இறுதி முடிவு எடுப்பார் எனக்கூறப்படுகிறது. அல்லது பாகிஸ்தானில் இருந்தபடி காணொளி வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டிகள் நடைபெறவில்லை.
சர்வதேச தொடர்களில் கூட இருநாடுகளும் பங்குபெறும் போட்டி, பொதுவான வேறு ஒரு நாட்டில் வைத்தே நடைபெறும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கிடையேயான உறவு இன்னும் மோசமடைந்துள்ளது.
ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி, மொஹ்சின் நக்வி கையால் ஆசிய கிண்ணத்தை பெற மறுத்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |