என் உடையை கழட்டினார்! 10 வயது சிறுவனுக்கு 32 வயது நபரால் நேர்ந்த கொடுமை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் சிறுவனிடம் பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்ட இளைஞனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Pea Ridge நகரை சேர்ந்தவர் ஆஸ்டன் ஹில் (32). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு காரணம் 10 வயது சிறுவனிடம் மிக மோசமாக ஹில் நடந்து கொண்டது தான். இது தொடர்பாக சிறுவன் பொலிசாரிடம் அளித்த புகாரில், ஹில் என் உடையை கழட்டி என் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார்.
இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என என்னையும் என் தாயாரையும் மிரட்டினார் என கூறினான்.
கைது செய்யப்பட்ட ஹில் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றவாளி ஹில்லிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் வாழ்நாள் முழுவதும் தொடர்பில் இருக்க கூடாது எனவும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவர் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.