உடல் வலுவிற்கு இந்த ஒரு லட்டு போதும்: எப்படி செய்வது?
மாறிவரும் காலகட்டத்தில் நாம் அனைவரும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
அந்தவகையில், எடை இழப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை ஏராளமான நன்மைகள் வேர்க்கடலையில் நிறைந்துள்ளது.
உடல் வலுவிற்கு சத்தான வேர்க்கடலை லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- 1 கப்
- வெல்லம்- ¼ கப்
- நாட்டு சக்கரை- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் வேர்க்கடலையை கடாயில் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து சூடு ஆறியதும் தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய வேர்க்கடலைகளை சேர்த்து ஒரு சுற்று விட்டு ஒரு சுற்று என நன்கு பொடித்து எடுக்கவும்.
அடுத்து இந்த வேர்க்கடலையை பொடியாக அரைத்த பிறகு அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் இரண்டு சுற்று விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
இதற்கு பிறகு ஒரு தட்டில் வேர்க்கடலை கலவையை கொட்டி சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்துக் கொண்டால் சுவையான வேர்க்கடலை லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |