வெறும் 90 நாட்களில் ரூ.9,840 கோடி வருமானம்! மிரளவைத்த இளைஞர்
Zyber 365 நிறுவனத்தின் CEO-வான பேர்ல் கபூர் தன்னுடைய நிறுவனம் தொடங்கிய 3 மாதங்களில் அதன் மதிப்பை 9,840 கோடி மதிப்புடையதாக மாற்றி அசத்தியுள்ளார்.
Zyber 365
வெப் 3 சைபர் செக்யூரிட்டி-ஐ அடிப்படையாக கொண்ட Zyber 365 என்ற புதிய தொடக்க நிறுவனத்தை 2023 மே மாதம் பேர்ல் கபூர் என்பவர் நிறுவினார்.
நிறுவனம் தொடங்கப்பட்டு 3 மாதங்களே ஆகி இருக்கும் நிலையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக Zyber 365 முன்னேறியுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவை தளமாக கொண்ட SRAM & MRAM குழுவினரிடம் இருந்து Zyber 365 நிறுவனம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது.
இதன்மூலம் நிறுவனம் தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் Zyber 365-ன் மதிப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலராக(இந்திய ரூபாய் மதிப்பில் 9,840 கோடி) உயர்ந்துள்ளது.
இந்தியாவை செயல்பாட்டு மையமாக கொண்டு செயல்படும் Zyber 365 நிறுவனம் தங்களுடைய தலைமை அலுவலகத்தை லண்டனில் நிறுவியுள்ளது.
யார் இந்த பேர்ல் கபூர்
பேர்ல் கபூர் Zyber 365 நிறுவனத்தை நெறிமுறை ஹேக்கரான சன்னி வகேலா உடன் இணைந்து மே 2023ம் ஆண்டு நிறுவினார்.
பேர்ல் கபூர் வெப் 3 OS-ஐ உருவாக்கியவர் என்று பலராலும் அறியப்படுகிறார், இவரே Zyber 365 நிறுவனத்தின் தினசரி செயல்பாட்டுகளை கையாளுகிறார். பேர்ல் கபூர் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் MSC முதலீட்டு வங்கி படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் Zyber 365 நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்னதாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் AMPM ஸ்டோரின் வர்த்தக ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
மேலும் Antier Solutions என்ற நிறுவனத்திற்கும் 1.5 ஆண்டுகள் தொழில் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அதே சமயம் 2022ம் ஆண்டு பிப்ரவரியில் மில்லியன் பே டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தையும் பேர்ல் கபூர் நிறுவியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |