பிரித்தானியாவில் பொலிஸ் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு: சோகத்தில் குடும்பத்தினர்!
பிரித்தானியாவில் பொலிஸ் கார் மோதியதில் 60 வயது பாதசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாதசாரி முதியவர் உயிரிழப்பு
நியூனெட்டனில்(Nuneaton) வெள்ளிக்கிழமை மாலை ஒரு பொலிஸ் கார் மோதியதில் 60 வயதான ஒரு பாதசாரி உயிரிழந்துள்ளார்.
Gipsy சாலையிலிருந்து Griff சுற்றுவட்டத்துக்கு(roundabout) இடையேயுள்ள B4113 கோவென்ட்ரி சாலையில்(B4113 Coventry Road) இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
அவசர சூழ்நிலைக்கு பதிலளிக்க சென்ற பொலிஸ் கார், பாதசாரி மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
அவசர சேவை ஊழியர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் ஈடுபட்ட இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.
சுயாதீன விசாரணை
இந்த மரணம் பொலிஸ் நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்டு இருப்பதால் வழக்கமான நடைமுறைப்படி, இந்த சம்பவம் சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்துக்கு (IOPC) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோகமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Warwickshire காவல்துறை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |