உக்ரைன் -ரஷ்யா பிணைக் கைதிகள் பரிமாற்றம்: 200க்கும் மேற்பட்டோர் விடுவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யா 200க்கும் மேற்பட்ட போர் பிணைக் கைதிகளை பரிமாறி கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிணைக் கைதிகள் பரிமாற்றம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்தியஸ்த நடவடிக்கை காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பில் இருந்தும் 103 போர் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆகஸ்ட் மாதம் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் நுழைந்த போது சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்களும் உள்ளடங்குவர்.
Another 103 Ukrainian warriors came back home from the russian captivity.
— Defense of Ukraine (@DefenceU) September 14, 2024
Soldiers of the Armed Forces, National Guard, State Border Guard Service, and National Police finally returned home.
We continue our work to bring everyone back from captivity.
Glory to Ukraine 🇺🇦 pic.twitter.com/xCfsiwjv3v
இரு தரப்பும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி “எங்கள் மக்கள் வீட்டில் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் உக்ரைன் நடத்திய சமீபத்திய திடீர் தாக்குதலில், ரஷ்யாவின் எல்லை நகரங்களில் 500 சதுர மைல் தொலைவை உக்ரைன் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |