புற்றுநோயுடன் போராடும் கால்பந்து ஜாம்பவான் பீலே.. அப்பாவை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மகள்
புற்றுநோய் பாதிப்பால் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பீலேவின் மகள் வெளியிட்டுள்ளார்.
மருத்துவப் படுக்கையில் போராடும் பீலே
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Meus amigos, que tristeza!
— Filipe Fogar ? (@filipefogar23) December 24, 2022
Pelé fez tantas pessoas chorarem de alegria… Hoje choramos em vê-lo nessa situação.
Legado absurdo! Pelé eterno ? #pelé #santosfc pic.twitter.com/o7PPHbYfVU
பீலேவின் மகள் கெலி நசிமென்டோ தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'போராட்டத்திலும், நம்பிக்கையிலும் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். மற்றொரு இரவிலும் ஒன்றிணைந்துள்ளோம்' என பதிவிட்டார்.
[00OMNS ]
அத்துடன் மருத்துவ படுக்கையில் இருக்கும் தனது தந்தையின் மார்பில் படுத்திருக்கும் புகைப்படத்தை கெலி நசிமென்டோ வெளியிட்டுள்ளார். அதில் பீலேவின் பேத்தி சோபியாவும் உடன் இருக்கிறார்.
பீலேவின் மகளின் பதிவு
இதற்கிடையில் நசிமென்டோ தனது பதிவில் பீலேவின் ரசிகர்களின் ஆதரவு தங்களுக்கு பெரிய ஆறுதல் என்று குறிப்பிட்டார். மேலும், 'அவர் மீதான உங்கள் அன்பு, உங்கள் கதைகள் மற்றும் உங்கள் பிரார்த்தனைகள் ஒரு பெரிய ஆறுதல். ஏனென்றால் நாங்கள் தனியாக இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்' என தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் பீலேவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை ஒரு புதுப்பிப்பை வழங்கியது. அவருக்கு இப்போது இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கான கவனிப்பு தேவை என விவரித்தது.