உக்ரைனுக்காக களத்தில் இறங்கிய மூன்று நாடுகள்! 825 மில்லியன் மதிப்பு..3000 க்ரூஸ் ஏவுகணைகள்
உக்ரைனுக்காக 3000க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பென்டகன் அங்கீகரித்துள்ளது.
க்ரூஸ் ஏவுகணைகள் விற்பனை
கீவ் மீது ரஷ்யா நடத்திய கொடிய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து மூன்று ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் தொடர்பில் உக்ரைனுக்காக களத்தில் இறங்கியுள்ளன.
உக்ரைனுக்கு 825 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள க்ரூஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பென்டகன் அங்கீகரிக்கிறது.
சுமார் 3000க்கும் மேற்பட்ட வான்வழி ஏவுகணைகளுக்கான கட்டணத்தை நோர்வே, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவை செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வாரங்களில்
Extended Range Attack Munition என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள், 150 முதல் 280 மைல்கள் வரை செல்லக்கூடியவை மற்றும் "சுமார் ஆறு வாரங்களில்" உக்ரைனை வந்தடையும் என அமெரிக்க ஊடகமான தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னலின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், U.S. Defense Security Cooperation Agency தெரிவிக்கையில், இந்த முன்மொழியப்பட்ட விற்பனை, உக்ரைனை தற்காப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள மேலும் தயார்படுத்துவதன் மூலம், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் என கூறியுள்ளது.
அத்துடன் ஐரோப்பாவில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான சக்தியாக இருக்கும் ஒரு கூட்டாளியாக, நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிக்கும் என்றும் தெரிவித்தது.
ஆனால், ஏவுகணைகள் எப்போது உக்ரைனுக்கு வரக்கூடும் என்பதற்கான காலக்கெடு கூறப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |