பென்டகன் வாசலில் துப்பாக்கிச் சூடு! அமெரிக்காவில் பரபரப்பு.. உடனடியாக பொதுமுடக்கம் அறிவிப்பு
அமெரிக்காவில் ராணுவ தலைமையிடமான பென்டகன் வாசலில் அதிகாரி ஒருவர் கொலைசெய்யப்பட்ட நிலையில், பென்டகனில் உடனடியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன், தலைநகர் வாஷிங்டனின் அர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதி நவீன ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனில் பொதுவாகவே பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பென்டகன் அருகே அமைந்துள்ள உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், வாஷிங்டன் டிசியின் புறநகரில் உள்ள பென்டகனுக்கு வெளியே ஒரு போக்குவரத்து நிலையத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது ஒரு அதிகாரி செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.
மேலும், சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் சட்ட அமலாக்கத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பென்டகனை சுற்றியுள்ள பகுதியில் உடனடியாக பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. பென்டகன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பென்டகன் அருகே வர வேண்டாம் என Pentagon's security force ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது, பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் மற்றும் ஜெனரல் மார்க் மில்லே ஆகியோர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


