ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை செலவு செய்த தொகை? பென்டகன் அதிரடி அறிக்கை
ஈரானுடனான போர் நடவடிக்கையில் அமெரிக்கா கிட்டத்தட்ட $25 பில்லியன் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் போரில் அமெரிக்கா செய்த செலவு?
பிப்ரவரி இறுதியில் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படையினர் களமிறங்கினர்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற ஆயுதப் படைக் குழுவின் முன்னிலையில் நடைபெற்ற முக்கிய விசாரணையில், ஈரானுடனான போரில் அமெரிக்கா இதுவரை செலவு செய்த தொகையை பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க இதுவரை கிட்டத்தட்ட $25 பில்லியன் தொகையை செலவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவின விவரங்கள்
ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தொடர்பான துல்லியமான செலவினங்கள் குறித்து பென்டகன் தலைமை நிதி அதிகாரி ஜூல்ஸ் ஹர்ஸ்ட் விவரித்துள்ளார்.

அதில், அமெரிக்கா ஈரானுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு இருப்பதால் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த வகையில் நிதி ஒதுக்கீட்டில் பெரும் பகுதி இதற்காக செலவு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போரினால் சேதமடைந்த அல்லது செயலிழந்த இயந்திரங்களுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களை வாங்குவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2027ம் நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டை $1.5 ட்ரில்லியனாக உயர்த்த முன்மொழிந்த நிலையில் காங்கிரஸ் அதை பரிசீலித்து வரும் நிலையில் இந்த தகவலானது வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |