உக்ரைனியர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சி: அமெரிக்கா அனுப்பிய பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்கள்!
ரஷ்ய போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா மிகவும் ரகசியமான பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களின் முதல் தொகுப்பை ஐரோப்பாவிற்கு இன்று அனுப்புயுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 65 நாள்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம் தங்களது தீவிர தாக்குலை நடத்த தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவின் இத்தகைய தாக்குதலை சமாளித்து, உக்ரைன் எதிர்ப்பு தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கா தங்களது முதல் தொகுப்பு ரகசிய ராணுவ ஆயுதங்களை இன்று ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துயுள்ளனர்.
இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு உள்ளாக அமெரிக்காவில் இருந்து கூடுதலாக ஆயுதங்களை உள்ளடக்கிய 12 விமானங்கள் புறப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்கு அனுப்பிய இந்த போர் ஆயுதங்களில் ஹோவிட்சர்கள்(howitzers) மற்றும் முதல் முறையாக புதிய ஃபீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்கள்(Phoenix Ghost drones) அனுப்பபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கையில், காமிகேஸ் வகை ட்ரோன்கள் எற்கனவே அனுப்பபட்டு இருந்த நிலையில், 100 சுவிட்ச் பிளேடு காமிகேஸ் ட்ரோன்களுடன் இணைந்து ரகசியமான புதிய ஃபீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களும் அனுப்பபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஃபீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்கள் ”பஞ்ச் வழங்கும்' 'ஒரு வழி ட்ரோன்” என அமெரிக்க அதிகாரிகள் முன்பு தெரிவித்து இருந்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: 50 ஆண்டுகள் பழமையான வரைப்படம்: உக்ரைனில் குழம்பி நிற்கும் ரஷ்ய வீரர்கள்!
இதையடுத்து அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து அனுப்பபட்டுள்ள இந்த புதிய ரகசிய ஆயுதங்களை உக்ரைனிய வீரர்கள் பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் வைத்து நடைப்பெறும் என தெரிவித்துள்ளது.