ரூ 3400 கோடிக்கு அரிதான புவி தனிமங்கள் கொள்முதல்... மூன்றாம் உலகப்போர் பீதியை ஏற்படுத்தும் பென்டகன்
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான அரிதான புவி தனிமங்களைக் கொள்முதல் செய்துள்ள விவகாரம் வரவிருக்கும் மூன்றாம் உலகப்போர் தொடர்பிலான அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
சீனாவின் பிடியை தளர்த்த
இந்த அரிதான புவி தனிமங்கள் (Rare earth materials) என்பது நவீன இராணுவ ஆயுதங்களில் பயன்படுத்தும் முக்கிய அம்சமாகும். 400 மில்லியன் டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 3440 கோடிக்கு அரிய புவி தனிமங்களை வாங்கியதன் ஊடாக கலிபோர்னியாவில் செயல்பட்டுவரும் அமெரிக்காவின் ஒரே ஒரு செயல்படும் அரிதான தனிமங்களின் சுரங்கத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க பாதுகாப்புத் துறை மாறியுள்ளது.
அரிதான புவி தனிமங்கள் என்பது 17 தனிமங்களின் கூட்டாகும். இதனால் உருவாக்கப்படும் காந்தத்தால் சக்தியை இயக்கமாக மாற்ற முடியும். இந்த காந்தங்கள் F-35 போர் விமானங்கள், நவீன ட்ரோன்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நகர்வு என்பது அரிதான புவி தனிமங்களைக் குவித்து வைத்திருக்கும் சீனாவை பின்னுக்கு தள்ளுவதாகும். சமீப காலம் வரையில் அரிதான புவி தனிமங்களுக்கு சீனாவையே அமெரிக்கா நம்பியிருந்தது.
மேலும், அமெரிக்கா உடனான வர்த்தகப் போரில் இந்த வாய்ப்பினை சீனா நன்றாகப் பயன்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான வர்த்தக மோதலின் போது மார்ச் மாதம் தொடங்கி புவி தனிமங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.
இரண்டு மடங்கு அதிக விலை
தற்போது MP தனிமங்கள் நிறுவனத்துடன் அமெரிக்கா முன்னெடுத்துள்ள ஒப்பந்தமானது ஆயுதங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பல மின்னணு சாதனங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தனிமங்களின் மீதான சீனாவின் பிடியை தளர்த்த உதவும் என்றே நம்பப்படுகிறது.
சுரங்கத்திலிருந்து கிடைக்கும் லாபம் அதன் செயலாக்க திறனை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் என்றே MP தனிமங்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் தனிமங்களை உற்பத்தி செய்யும் வகையில் புதிய நிறுவனம் ஒன்றையும் நிறுவ MP முடிவு செய்துள்ளது.
மிகப் பிரபலமான இரண்டு தனிமங்களுக்கு மட்டும் கிலோவிற்கு 110 டொலர் அளிக்க பென்டகன் உறுதி அளித்துள்ளது. சீனாவை விட இரண்டு மடங்கு அதிக விலையாகும். மேலும், 600 மில்லியன் டொலர் முதலீடு செய்யவும், இந்த திட்டத்தை விரிவு படுத்தவும் MP முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |