ரஷ்யாவின் பேரழிவு ஆயுதம்: உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் - பென்டகன் எச்சரிக்கை
Pentagon warns about russia's space weapon: ரஷ்யா விண்வெளியில் ஒரு பேரழிவு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது என பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விண்வெளிப் பாதையிலேயே வெடிக்கச் செய்யக்கூடிய பேரழிவு ஆயுதத்தை ரஷ்யா உருவாக்கி வருவதாக பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய பேரழிவு ஆயுதம்
ரஷ்யாவின் ஆயுதம் குறித்து பாதுகாப்பு புலனாய்வு முகமையின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ரஷ்யா உருவாக்கி வரும் புதிய பேரழிவு ஆயுதம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரஷ்யாவின் அந்த ஆயுதம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அதன் விண்வெளிப் பாதையிலேயே வெடிக்கச் செய்ய முடியும் என்றும், உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறியுள்ளது.
அத்தகைய தாக்குதல் உலகளவில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்; இது பிரித்தானிய பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சிக்குள்ளாக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஐரோப்பாவுடன் போரிட தயாராக இருப்பதாக மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை வியாழக்கிழமை அன்று விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
