ஹொட்டல்களிலிருந்து மாயமாகும் புலம்பெயர்ந்தோர்... ஒப்பந்ததாரர் கூறும் அதிர்ச்சி தகவல்
ஹொட்டல்களிலிருந்து தினமும் புலம்பெயர்தோர் மாயமாகி வருவதாகத் தெரிவிக்கிறார் ஒப்பந்ததாரர் ஒருவர்!
மாயமாகும் புலம்பெயர்ந்தோர்...
பிரித்தானிய அரசு புகலிட அமைப்பை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ள நிலையில், சரியான கண்காணிப்பு இல்லாததால், ஹொட்டல்களில் தங்கியுள்ள புலம்பெயர்ந்தோர் மாயமாகிவருவதாகத் தெரிவிக்கிறார், இங்கிலாந்தின் ஒரு பகுதியிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் ஒப்பந்ததாரராக பணியாற்றும் ஒருவர்.

ஹொட்டலிலிருந்து வெளியேறும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், ஒரு வாரத்துக்கு மீண்டும் ஹொட்டலுக்குத் திரும்பவில்லை என்றால், அவர் தலைமறைவானவராக கருதப்படுவார் என்கிறார் அந்த ஒப்பந்ததாரர்.
சில நேரங்களில் வாரத்துக்கு ஒருமுறை இப்படி புலம்பெயர்ந்தோர் மாயமாகிறார்கள், சில நேரங்களில், அது தினமும் நடக்கிறது என்கிறார் அவர்.
அவர்கள் எங்கே போகிறார்கள்?
ஒருவருடைய புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அதிகாரிகள் அவர் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு வந்து அவரிடம் உங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று கூறி அவர்களை அழைத்துச் செல்வதெல்லாம் இல்லை.
தங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்னும் தகவல் கிடைத்ததும் இந்த புலம்பெயர்ந்தோர் ஹொட்டலை விட்டு வெளியேறுகிறார்கள் என்கிறார் அவர்.

அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் அப்படியே சமூகத்தின் பார்வையிலிருந்து மறைந்துபோகிறார்கள் என்கிறார் அவர்.
அப்படி தெருக்களில் நடமாடுவோர் அப்படியே கவனிக்கப்படாமல் விடப்படுவார்களானால், அவர்களால் ஆபத்தும் ஏற்படலாம் என்கிறார் அவர்.
அவர் சொல்வது உண்மைதான் என தோன்றுகிறது, எத்தியோப்பொயாவிலிருந்து புலம்பெயர்ந்த காலித் கூறுவதைக் கேட்டால்.
நான்கு முறை அவர் புகலிடம் கோரி விண்ணப்பித்தும் அவரது புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம்.
அப்போது, பேசாமல் ஏதாவது ஒரு குற்றம் செய்துவிட்டு சிறைக்காவது சென்றுவிடலாமா என்று நினைத்தேன் என்கிறார் காலித்.
அதிர்ஷ்டவசமாக, அவருக்கு அடுத்த புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரையில் தன்னார்வலராக பணி புரியும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
கெட்டது நினப்பதற்கு பதிலாக, தன் வாழ்க்கையை நல்லது செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவிக்கிறார் அவர்.
ஆனால், எல்லோரும் அப்படி இல்லையே, நாடுகடத்தப்படுவோம் என பயந்து தலைமறைவாகிவிடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதையெல்லாம் குறித்து விசாரித்தால், நாங்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டலில் தங்கும் விடயத்தையே முடிவுக்குக் கொண்டுவரப்போகிறோம் என்கிறார் பிரித்தானிய உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர்!
பிரித்தானியாவில் வாழ உரிமை இல்லாத 50,000 புலம்பெயர்ந்தோரை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளோம்.
மாயமானவர்களைக் கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, அத்துடன், ஹொட்டல்களுக்குத் திரும்பாதவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி உதவி நிறுத்தப்படும் என்கிறார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |