மகிந்த ராஜபக்ச ஆதரவாளரை அடித்து குப்பை வண்டியில் போட்ட மக்கள்! பரபரப்பு வீடியோக்கள்
இலங்கை தலைநகர் கொழும்பில் பிரதமர் ஆதரவாளர்களை மக்கள் விரட்டி விரட்டி அடித்து வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இன்று கொழும்பில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு பகுதியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் பேருந்து மூலம் கொழும்பு வந்திருந்தனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கோபமடைந்த மக்கள், கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை விரட்டி விரட்டி அடித்துள்ளனர்.
கையில் கட்டைகளை எடுத்த மக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை அடித்து பேர குளத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.
மேலும், குளத்தை விட்டு வெளியே வந்தால் அடி விழும் என மக்கள் எச்சரித்து்ளளனர்.
#BREAKING #lka #SriLanka pic.twitter.com/y9l4obimEy
— Vithushan Jeyachandran (@imjvithu) May 9, 2022
அதுமட்டுமின்றி, மகிந்த ஆதரவாளர்கள் சென்ற பேருந்துகளை வழிமறித்த மக்கள், வாகனத்தை அடித்து நொறுக்கிய கட்சிகாரர்களை விரட்டியடித்துள்ளனர்.
Angry crowds dump a pro @PresRajapaksa supporter in a garbage cart as others attack buses that transported Rajapaksa supporters to Colombo. Pro Rajapaksa mobs earlier attacked p[peaceful anti-Gov protesters pic.twitter.com/fkHXHw7kt8
— Amantha (@AmanthaP) May 9, 2022
இது ராஜபக்சக்களின் முடிவு! கொழும்பு வன்முறை குறித்து சனத் ஜெயசூர்யா காட்டம்
மேலும், பிரதமர் ஆதவாளர் ஒருவரை சரமாரியாக தாக்கிய மக்கள், அவர் குப்பை வண்டியில் போட்டு இழுத்துச்சென்றுள்ளனர்.
Busses that brought MR's hooligans, getting gutted all around Colombo #SriLankaCrisis pic.twitter.com/ZgctctcxnJ
— Market News?? (@MarketNewsLK) May 9, 2022