இது ராஜபக்சக்களின் முடிவு! கொழும்பு வன்முறை குறித்து சனத் ஜெயசூர்யா காட்டம்
இலங்கை தலைநகர் கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதற்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சனத் ஜெயசூர்யா ட்விட்டரில் பதிவிட்டதாவது, பட்டப்பகலில் மற்றும் கோவில் மரங்களுக்கு வெளியே காலி முகத்திடலில் அப்பாவி போராட்டக்காரர்கள் மீது இதுபோன்ற குண்டர்கள் கட்டவிழ்த்து விடப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
கொழும்பில் பரபரப்பு... போராட்டகாரர்களை சரமாரியாக தாக்கிய அரசு ஆதரவாளர்கள்! வீடியோ ஆதாரம்
ஊழல் அரசியல்வாதிகளை அல்ல, இந்த நாட்டின் பொதுமக்களைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளோம் என்பதை காவல்துறை நினைவில் கொள்ள வேண்டும். இது ராஜபக்சக்களின் முடிவு என சனத் ஜெயசூர்யா கொந்தளித்துள்ளார்.
I never thought that this type of thuggery will be unleashed on innocent protesters at galle face in broad day and outside temple trees. The police must remember they are here to protect the PUBLIC of this country not corrupt politicians. This is the end of the Rajapaksas https://t.co/taSqJEyX6j
— Sanath Jayasuriya (@Sanath07) May 9, 2022
Footage of Government supporters assaulting protester at "GotaGoGama" pic.twitter.com/nAxkbQi1nX
— NewsWire ?? (@NewsWireLK) May 9, 2022