காயங்களுக்கு மருந்து இல்லாமல் கண்முன்னே மக்கள் இறக்கிறார்கள்! உக்ரைன் மருத்துவர் வேதனை
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலை அடித்தளத்தில் மக்கள் காயங்களுக்கு மருந்து இல்லாததால் இறப்பதாக மருத்துவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, மரியுபோலில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், அந்நகரில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் உக்ரேனிய வீரர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்தனர்.
அசோவ்ஸ்டல் ஆலை, மரியுபோல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து கிட்டதட்ட 500 பேர் 2 முறை வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதாக ஐ.நா பொதுச் செயலாளர் António Guterres உறுதிப்படுத்தியுள்ளார்.
அசோவ்ஸ்டல் எஃகு ஆலை அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு உதவி வரும் மருத்துவர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், இந்த போருக்கு முன் நான் மரணத்தை பார்த்ததே இல்லை. நாம் ஆம்புலன்ஸில் பணிபுரிந்தேன்.
The doctor providing assistance in the basements of Azovstal said that people die from purulent wounds.
— ТРУХА⚡️English (@TpyxaNews) May 6, 2022
“I never saw death before the war. Worked in an ambulance. But now ,it is painful to watch people die on their hands from festering wounds due to the lack of antibiotics.” pic.twitter.com/4oW5IVKmG9
ஆனால் தற்போது, காயங்களுக்கு மருந்து இல்லாமல் மக்கள் கண் முன்னே இறப்பதை பார்ப்பது மிக வேதனையாக இருக்கிறது என வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.