வேற வழியே இல்லை! கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளுங்கள்.. மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதனுடன் வாழ பழகி கொள்ளுங்கள் என்று மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகிலிருந்து முழுமையாக ஒழிய வாய்ப்பில்லை எனவும் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பது மக்களை அச்சத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வருகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் இலட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலை கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூடியதாவது, கொரோனா தொற்று மருத்துவ கட்டமைப்புகள் சிதைத்து வருவதாகவும் கொரோனாவுடன் வாழ நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.
நல்ல தரமுள்ள முக கவசங்களை அணிவது மூலமாகவும் முழு அளவிலான தடுப்பூசி செலுத்தி கொள்வது ஆகியவற்றால் கொரோனாவுடன் நாம் வாழ முடியும். எனவே கடுமையான ஊரடங்கு எதுவும் பிறப்பிக்காமல் பொதுமக்களை கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளுங்கள் என்று தெரிவித்தியுள்ளார்.