360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி 2 மீட்டர் நகர்த்திய மக்கள்

Japan
By Karthikraja Aug 26, 2026 01:50 PM GMT
Report

people moved 360 ton castle by ropes ஜப்பானில் 360 டன் எடையுள்ள கோட்டையை பொதுமக்கள் 2 மீட்டர் தூரம் கயிறு கட்டி நகர்த்தியுள்ளனர்.

360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி நகர்த்திய மக்கள்

ஜப்பானின் ஆவோமோரி மாகாணத்தில் உள்ள ஹிரோசாகி கோட்டை(hirosaki castle) 1611 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், 1627 ஆம் ஆண்டில் மின்னல் தாக்கியதில் வெடிமருந்துக் கிடங்கு தீப்பற்றிக்கொண்டதால், அதன் அசல் மையக்கோட்டை எரிந்துபோனது. 

360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி 2 மீட்டர் நகர்த்திய மக்கள் | People Moved 360 Ton Japan Hirosaki Castle By Rope

தற்போதைய கோபுரம் 1810 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

நிலநடுக்கத்தில் இந்த கோட்டையின் சுவர்கள் சேதமடைந்தால் அதனை பலப்படுத்த கோட்டையை இடிக்காமல் அதனை ஹிக்கியா என்று அழைக்கப்படும் கீழ் பகுதியில் தண்டவாளங்களை பொருத்தி நகர்த்தும் தொழில்நுட்பம் மூலம் நகர்த்தி சீரமைக்க முயற்சித்தனர். 

நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுற்றுலா சென்ற 57 தமிழர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுற்றுலா சென்ற 57 தமிழர்களின் நிலை என்ன?

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த கோட்டை மனிதர்கள் மற்றும் எந்திரங்களின் உதவியுடன் நகர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. அப்போது 2,185 கற்களும் அவற்றின் அசல் இடங்களில் மீண்டும் அடுக்கப்பட்டன. 

சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், கோட்டையை அதன் பழைய இடத்திற்கே மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடினர். 

360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி 2 மீட்டர் நகர்த்திய மக்கள் | People Moved 360 Ton Japan Hirosaki Castle By Rope

சுமார் 1800 பேர் இதற்கு தேவைப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 4000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 

தற்போது 1800 பேர் 80 குழுக்களாக பிரிந்து கயிறு மூலம் இழுக்கும் பணியை தொடங்கினர். 30 மீட்டர் நீளமுள்ள கயிறுகளை பயன்படுத்தி 2 மீட்டர் வரை நகரத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 5 மீட்டர் தூரம் மக்கள் நகர்த்திய பின்னர், மீதமுள்ள சுமார் 73 மீட்டர் தூரம், இந்த ஆண்டின் இறுதிக்குள் இயந்திரங்களைப் பயன்படுத்தி நகர்த்தப்படும். மீதமுள்ள பணிகள் முடிந்த பின்னர், 2033 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும்.

தனது தலைப்பாகையில் 2 ஜப்பானியக் கொடிகளைச் செருகிக்கொண்டு இந்த முயற்சியில் இணைந்த 82 வயதான கட்சுமி டெராடா, 11 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை இடமாற்றம் செய்யப்பட்டபோதும் பங்கேற்றிருந்தார்.

இந்த கோட்டையை நகர்த்திய போது, மீண்டும் கோட்டை பழைய இடத்திற்கு வருவதை பார்க்க நான் அவ்வளவு காலம் வாழ்வேனா என கவலைப்பட்டேன். ஆனால் பாருங்கள், நான் விடாமுயற்சியுடன் இருந்தேன். நான் உயிருடனும் நலமுடனும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US