இனியும் பொறுக்க முடியாது! ரஷ்யாவை எதிர்க்க துணிச்சலாக களத்தில் இறங்கிய உக்ரைன் மக்கள்... சிலிர்க்க வைத்த சம்பவம்
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ரைன் பொதுமக்கள் துணிச்சலுடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் எட்டு நாட்களாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு போர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். உலக நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்தும் அடங்க மறுக்கும் ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறது.
இந்தப் போரில் உக்ரைனைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தப் போரில் ரஷ்யப் படைக்கு சொந்தமான 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 டாங்கிகள், 90 சிறிய ரக பீரங்கிகள், 900 ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை அழித்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரேனிய பொதுமக்கள், செர்னிஹிவ் பகுதியில் பாக்மாச் நகரத்தின் வழியாக உள்ளே நுழையும், ரஷ்ய ராணுவ டாங்கிகள் மீது ஏறி தடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி, வைரலாகி வருகிறது.
உக்ரேனிய மக்களின் இந்த துணிச்சல் ஈடு இணையற்றது என ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய விசே கிராடு 24 குழு பாராட்டியுள்ளது.
நமது நாட்டை நாம் தான் காப்பாற்ற வேண்டும் மற்றும் பாதுகாக்க வேண்டும் என உயிரையும் துச்சமாக எண்ணி பொதுமக்கள் இச்செயலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.