பிரான்சில் கொரோனா விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து பொதுமக்கள் சாலையில் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் கடந்த மாதத்தில் இருந்து மெதுவாக தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron மாறுபாடும் அதிகரித்து வருகின்றது.
இரண்டு வைரஸிற்கு நடுவில் சிக்கி கொண்டு மக்கள் போராடி வருகின்றனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
அந்த வகையில் பிரான்ஸ் நாடு கொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் உள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் கொரோனாவை கட்டுக்கள் அடக்க சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதாவது, 16 வயதுக்கு மேற்பட்டோர் உணவகம், திரையரங்கம், பார் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் இந்த விதிமுறை திங்கட்கிழமை முதல் அமுலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டு தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகின்றது. இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் என்ன பயன் என்று பல கேள்விகளை அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பி யுள்ளனர்.