வெண்டைக்காய் நல்லது தான்... ஆனால் இந்த 5 பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
வெண்டைக்காயில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் சிலர் இந்த வெண்டைக்காய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஏன் இவர்கள் வெண்டைக்காயை சாப்பிட கூடாது?
பொதுவாக மருத்துவர்கள் பச்சை நிற காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அனைத்து காய்கறியிலும் ஏதோ ஒரு சத்து நிறைந்து தான் காணப்படுகிறது.
அந்தவகையில் வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்களும் ஏராளம். அதில், பல வைட்டமின்களும், தாதுக்களும், நார்ச்சத்தும், கார்போஹைட்ரேட்களும் அதிகம் உள்ளன. மேலும், கண், உடல் எடை, எலும்புகளை பராமரிக்க வெண்டைக்காய் உதவும்.
அதுமட்டுமல்லாமல், வெண்டைக்காயில் உள்ள ஃபிளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரெடிள்களின் எதிர்ப்பை குறைக்கின்றன. இதில், எண்ணென்ற நன்மைகள் இருந்தாலும் சிலர் மட்டும் இந்த வெண்டைக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அலர்ஜி
உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை ஏதாவது இருந்தால் வெண்டைக்காய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதாவது கொக்கோ மற்றும் செம்பருத்தி பூவிற்கு அலர்ஜி இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். இதனால், சரும பிரச்சனைகள் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனை ஏற்படும்.
சிறுநீரக கல் பிரச்சனை
சிறுநீரகம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆக்சிலேட் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படியானால், வெண்டைக்காயில் ஆக்சிலேட் உள்ளதால் அவர்கள் இந்த உணவை சாப்பிட கூடாது.
சிறுநீரக கல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களும், ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் இதனை தவிர்ப்பது நல்லது.
இரைப்பை குடல் பிரச்சனை
இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனை, வாயு வீக்கம், வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு பலவீனமான குடல் பிரச்சனை இருப்பதால், அதிகமான வாயு மற்றும் உப்பிசம் ஏற்படலாம்.
அதனால், அவர்கள் வெண்டைக்காய் சாப்பிடும் போது எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வெண்டைக்காயை எடுத்துக் கொண்டால் நல்லது.
வெண்டைக்காய் சமைக்கும் முன்பு குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
இரத்தம் உறைதல்
இரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்களும், அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி வெண்டைக்காய் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், வெண்டைக்காயில் இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் k உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |