10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி: DNA பரிசோதனை கொடுத்த அதிர்ச்சி
அமெரிக்காவில், 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியர், தற்செயலாக DNA பரிசோதனை செய்துகொள்ள, பரிசோதனை முடிவுகள் கொடுத்த அதிர்ச்சி, தம்பதியரை விவாகரத்து எண்ணம் வரை கொண்டு சென்றது.
DNA பரிசோதனை கொடுத்த அதிர்ச்சி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், செலினாவும் (Celina Quinones, 37) ஜோசப்பும் (Joseph, 44), 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பமாக வாழ்ந்துவந்துள்ளார்கள்.
சமீபத்தில், தங்கள் மூதாதையர்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக DNA பரிசோதனை செய்துகொண்டுள்ளார்கள் தம்பதியர். ஆனால், DNA பரிசோதனையின் முடிவுகள் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
Image: realestatemommaz/Instagram
ஆம், செலினாவும் ஜோசப்பும், சகோதர உறவுமுறை கொண்டவர்கள்.
விவாகரத்து எண்ணம் வரை கொண்டு சென்ற முடிவுகள்
அதிர்ச்சியில், விவாகரத்து செய்துகொள்ளலாமா என யோசிக்கத் துவங்கியுள்ளார்கள் தம்பதியர். ஆனால், பிள்ளைகளும், குடும்பத்தாரும், குறிப்பாக செலினாவின் தந்தை, இல்லை, நீங்கள் பிரியக்கூடாது, குடும்பமாக நீங்கள் சேர்ந்து வாழத்தான் வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்கள்.
அத்துடன், பிள்ளைகள் வாழ்க்கையும் பாதித்துவிடக்கூடாது என்று எண்ணிய இருவரும், தொடர்ந்து குடும்பமாக வாழ்வது என முடிவு செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |