உதயநிதியிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்.., ஒரே நாளில் நடந்த உடனடி மாற்றம்
தங்களது கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்றியதற்காக துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை வைத்த மக்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
அந்தவகையில், ஒக்டோபர் 15 -ம் திகதி அன்று எஸ்.கொளத்தூர் அம்பேத்கர் சாலை பாலத்தின் இருபுறங்களிலும் நீர் செல்லும் வேகம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், கால்வாயில் ஆகாயத் தாமரை படர்ந்து நீரின் வேகத்தை குறைப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி கூறினார்.
இதன் பின்னர்,மிதவை அமைப்புடன் கூடிய பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கால்வாயில் ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் நீர்வளத்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஒக்டோபர் 16 -ம் திகதி அன்று 100 மீட்டருக்கும் மேற்பட்ட மீதமுள்ள பகுதிகளில் ஆகாயத்தாமரை முற்றிலும் அகற்றப்பட்டு நீர் சீராக செல்வதை உதயநிதி பார்வையிட்டார்.
இதனால், தாங்கள் வைத்த கோரிக்கை ஓரிரு நாட்களிலே நிறைவேற்றியதற்காக பொதுமக்கள் அவருக்கு நன்றியை தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |