ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை

Climate Change Heat wave Europe Wildfire
By Arbin Jan 28, 2025 03:21 AM GMT
Report

2099 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பாவில் காலநிலை மாற்றத்தால் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று பயங்கரமான புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையான இறப்பு விகிதம்

லண்டன் பல்கலைக்கழகத்தின் LSHTM என்ற அமைப்பில் செயல்படும் விஞ்ஞானிகள், 2015 மற்றும் 2099 க்கு இடையில் 5.8 மில்லியன் ஐரோப்பியர்கள் அதிகப்படியான வெப்பத்தால் இறந்துவிடுவார்கள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை | People Will Die By 2099 Due To One Thing

ஆனால், காட்டுத்தீ மற்றும் வெப்பமண்டல புயல்கள் போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு தரும் வானிலை நிகழ்வுகளுடன் தொடர்புடைய இறப்புகளை இந்த ஆய்வு உள்ளடக்கவில்லை, எனவே உண்மையான இறப்பு விகிதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றே அஞ்சப்படுகிறது.

மட்டுமின்றி, இந்த ஆய்வின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள், குளிர் காலநிலை தொடர்பான இறப்புகளின் வீழ்ச்சி வெப்பத்தின் அதிகரிப்பால் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக வெப்ப அலை தொடர்பான இறப்புகள் அதிகம் உள்ள நகரமாக பார்சிலோனா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து ரோம், நேபிள்ஸ் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களில் இறப்பு அதிகமாக பதிவாகும்.

எல்லையில் உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர்கள்: காப்பாற்ற மறுத்த ஐரோப்பிய நாடொன்று

எல்லையில் உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர்கள்: காப்பாற்ற மறுத்த ஐரோப்பிய நாடொன்று

இந்த ஆய்வுகளை முன்னெடுத்துள்ள விஞ்ஞானிகளில் முதன்மையான Dr Pierre Masselot தெரிவிக்கையில், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் அதிகரித்த வெப்பத்திற்கு ஏற்ப தகவமைப்பு ஆகிய இரண்டையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டியதன் அவசரத் தேவையை எங்கள் முடிவுகள் வலியுறுத்துகின்றன என்றார்.

மேலும், மத்தியதரைக் கடல் பகுதியில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர், அங்கு எதுவும் செய்யப்படாவிட்டால், விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்றார்.

தெற்கு ஐரோப்பிய நாடுகள்

மட்டுமின்றி, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மில்லியன் கணக்கான இறப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் Dr Pierre Masselot குறிப்பிட்டுள்ளார்.

ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை | People Will Die By 2099 Due To One Thing

ஆய்வின் ஒரு பகுதியாக, 2015 மற்றும் 2099 க்கு இடையில் 854 ஐரோப்பிய நகரங்களில் எதிர்கால வெப்பம் தொடர்பான இறப்புகளைக் கணிக்க, டாக்டர் மாஸ்ஸலோட் மற்றும் அவரது சகாக்கள் வெப்பநிலை மற்றும் இறப்புத் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.

அதில், அதிக greenhouse வாயு வெளியேற்றம் இருந்து, வெப்பத்திற்கு ஏற்ப மாறாவிட்டால், ஐரோப்பாவில் மொத்தம் 5,825,746 அதிகப்படியான இறப்புகள் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும், கடும் குளிரால் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள 3,480,336 இறப்புகள் தவிர்க்கப்படும், இதனால் 2099 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் ஒட்டுமொத்த நிகர இறப்பு எண்ணிக்கை என்பது 2,345,410 என இருக்கும்.

ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை | People Will Die By 2099 Due To One Thing

இதில் மிக மோசமாக கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் பகுதி என்பது மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் பால்கன் போன்ற தெற்கு ஐரோப்பிய நாடுகள் என்றே ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US