சர்க்கரை நோயாளிகள் முருங்கைக்காயை சாப்பிடலாமா? ஆயுர்வேத மருத்துவர் கூறும் தகவல்
தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரும்.
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் உணவுகள் மற்றும் பானங்களின் கிளைசெமிக் குறியீடு என்பது மிகவும் முக்கியமானது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு உணவுதான் இந்த முருங்கை. இதில் ஆன்டிவைரல், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
எனவே தான் இவற்றை நாம் நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
கிடைக்கும் நன்மைகள் என்ன?
முருங்கை மரத்தில் கிடைக்கும் பூ, இலை, காய் என அனைத்திலும் மருத்துவகுணங்கள் கொட்டி கிடைக்கின்றன.
இதில் இன்சுலின் போன்ற புரதங்களும் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதளவில் உதவுகிறது.
மேலும் இதில் உள்ள க்ளைகோசைடுகள், கிரிப்டோ குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் 3 ஓ குளுக்கோசைடு ஆகியவற்றின் காரணமாக சர்க்கரை நோயின் பாதிப்புகளை குறைக்கலாம்.
முருங்கையை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது இரத்த சரக்கரை அளவைப் பராமரிக்கவும் , உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவியாகவும் இருக்கிறது.
அளவோடு முருங்கையை எடுத்துக்கொள்வதால் பல ஆரோக்கியங்கள் கிடைக்கும். எனினும் அதிகளவில் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உங்கள் இதய துடிப்பைக் குறைக்கும்.
குறிப்பாக தைராய்டு பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்பவர்கள் முருங்கையைத் தவிர்ப்பது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |