எமன் வாயிலிருந்து மகன் பேரறிவாளனை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார் அற்புதம்மாள்! வைகோ
எமன் வாயிலிருந்து மகன் பேரறிவாளனை அற்புதம்மாள் மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து நேற்று மாலையே பேரறிவாளன் குடும்பத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிக்கட்சித் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
இந்நிலையில், இன்று அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்கு நேரில் சென்று பேரறிவாளன் நன்றி கூறினார்.
இதன் போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பேரறிவாளன் ஈழ உணர்வு உள்ளவர், ஆனால் இந்த வழக்கில் நிரபராதி.
எந்த குற்றமும் அற்றவர், அதில் எந்த தொடர்பும் கிடையாது. கடைசியிலே நீதி வென்றது, நீதிவென்றது என்று சொன்னால், அதற்கு இங்கு இருக்கக்கூடிய ஆளுநர் அரசாங்கத்தின் முடிவையே அனுப்பாமல், அரசாங்கத்தின் முடிவை செய்லபடுத்தாமல் இருந்தார்.
கடைசியிலே உச்ச நீதிமன்றம் தலையிட்டு 142வது பிரிவை பயன்படுத்தி அவருக்கு வாழ்வு கொழுத்திருந்தாலும், அவரின் வாழ்வு அழிந்துவிட்டது, இளமை காலம் அழிந்துவிட்டது, வசந்தக்காலமெல்லாம் போய்விட்டது.
அதற்காக அவரது தாயார் அற்புதம்மாள் அவர்கள் போரடிய போராட்டம், மிகப்பெரிய வீராங்கனையாக இருந்து போராடினார்.
உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவில் உயிர் பலி! உறுதிப்படுத்திய கவர்னர்
மற்ற யாராக இருந்தாலும் தளர்ந்துவிடுவார்கள், சோர்ந்துவிடுவார்கள், கவயைில் ஆழ்ந்துவிடுவார்கள், மகனுக்கு விடுதலையை பெற்று தருவதற்கு, அது ஏதுவுமே கொஞ்சம் கூட இல்லாமல் போராடினார்.
இன்று எமன் வாயிலிருந்து மகனை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார் அற்புதம்மாள்.
இதன் அடிப்படையிலே மீதி உள்ள 6 பேரும் விடுதலையாகிவிடுவார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி அழிந்துவிட்டதே என வைகோ வேதனை தெரிவித்தார்.