ஈரான்-அமெரிக்க போரால் முக்கியத்துவம் பெற்றுள்ள சிறிய தீவு
Perim Island Key in Iran Conflict: ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக ஏமனின் சிறிய தீவு ஒன்று உலக எண்ணெய் விநியோகத்தின் புதிய மையமாக மாறவுள்ளது.
பெரிம் தீவு
பெரிம் தீவு (Perim Island), எமனின் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய தீவு, தற்போது ஈரான்-அமெரிக்கா மோதல் காரணமாக உலக அரசியல் மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த தீவு Bab-el-Mandeb Strait எனப்படும் குறுகிய கடல் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் இடையே செல்லும் கப்பல்களுக்கு முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது.
சவுதி அரேபியா, எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தனது எண்ணெய் ஏற்றுமதியை ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இருந்து செங்கடல் வழியாக மாற்றியுள்ளது. இதனால் பெரிம் தீவின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
கைப்பற்ற முயற்சிக்கும் ஹவுதி
ஆனால் தற்போது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் (Houthi rebels) பெரிம் தீவை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தீவை கட்டுப்பாட்டில் கொண்டால், செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை தடுக்க முடியும் என்பதால், இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
CNN வெளியிட்ட தகவலின்படி, ஹவுதி படைகள் பெரிம் தீவின் வடக்கில் உள்ள மோகா (Mocha) நகரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இது பெரிம் தீவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வரலாற்று தளம்
பெரிம் தீவு, பிரித்தானிய கப்பல்கள் இந்தியாவிற்கு செல்லும் போது பயன்படுத்திய வரலாற்று தளம் என்பதால், இப்போது மீண்டும் உலக அரசியல் கவனத்தை ஈர்க்கிறது.
இந்த தீவு கைப்பற்றப்பட்டால், உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் தடைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் இந்த பகுதியில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |