முதல் மாதவிடாய் எதிர்கொண்ட 14 வயது சிறுமி: மன அழுத்தத்தில் எடுத்த விபரீத முடிவு
மாதவிடாய் குறித்த மன அழுத்தம் காரணமாக மும்பையில் 14 வயது சிறுமி விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமி எடுத்த முடிவு
மும்பையின் Makwani பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது முதல் மாதவிடாய் சந்தித்த நிலையில் வியாழக்கிழமை இரவு விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளார்.
உறவினர்கள் விபரீத முடிவு குறித்து அறிந்ததும் விரைவாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் சிறுமி அவளது முதல் மாதவிடாய் உடல் மாற்றத்தின் போது தீவிரமான வலியை அனுபவித்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே சிறுமி விபரீத முடிவு செய்து கொண்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை அறிக்கைகளின்படி, இந்த சிறுமியின் குடும்பத்தினர், மாதவிடாய் குறித்த அறிவின்மை மற்றும் உடல் உபாதைகள் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே இவருடைய மரணத்திற்கு முக்கியக் காரணம் என நம்புகின்றனர்.
இது போன்ற விழிப்புணர்வின்மை, மாதவிடாய் குறித்த திறந்த தொடர்பு மற்றும் வயதுக்கேற்ற கல்வியின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |