50 முதலைகள் இருந்த குழிக்குள் விழுந்த நபர்: பின்னர் நடந்த பயங்கரம்
கம்போடிய கிராமம் ஒன்றில், 50 முதலைகள் இருந்த குழிக்குள் விழுந்த ஒருவரை முதலைகள் கடித்துக் குதறிய பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கம்போடியாவிலுள்ள Kampong Tayong என்னும் கிராமத்தில் வாழ்பவர், Sou Sothea (37).
அக்கிராமத்தவர்கள் முதலைகளை இனப்பெருக்கம் செய்து குட்டிகளை விற்பனை செய்துவருகிறார்கள்.
Sotheaவும் அப்படி சுமார் 50 முதலைகள் வைத்திருக்கிறார்.
சமீபத்தில், குடும்பத்தினருடன் மதுபானம் அருந்தியபின் தூங்கச் சென்ற Sothea, நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக சென்றிருக்கிறார்.
அப்போது அவர் முதலைகள் இருக்கும் குழி ஒன்றிற்குள் தடுக்கி விழுந்திருக்கிறார். அவர் சத்தம் போட்டதைக் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் அவரது குடும்பத்தினரை எழுப்ப, அவர்கள் வந்து கட்டைகளால் முதலைகளை அடித்து விலக்கி Sotheaவை குழிக்குள்ளிருந்து வெளியே எடுத்திருக்கிறார்கள்.
அதற்குள் தகவலறிந்து வந்த பொலிசார், 50 முதலைகள் இருந்த குழிக்குள் விழுந்ததால் முதலைகளால் தலை முதல் கால் வரை கடித்துக் குதறப்பட்ட Sotheaவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
சிகிச்சைக்குப் பின் Sotheaவின் நிலைமை சீரியஸாக இருந்தாலும், நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது.