அமீரக லொட்டரியில் தமிழருக்கு அடித்த ஜாக்பாட்.., எவ்வளவு தொகை தெரியுமா?
ஐக்கிய அரபு அமீரக லொட்டரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
அமீரக லொட்டரி
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் வாரம் தோறும் FAST5 மற்றும் MEGA7 என்ற லொட்டரி குலுக்கல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த குழுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் பரிசுத்தொகையை வென்று வருகின்றனர்.
மேலும், ஓன்லைன் மூலமும் ஏராளமான மக்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற லொட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவரும், சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவரும் லட்சங்களில் பரிசுத்தொகையை குவித்துள்ளனர்.
கேரள நபர்
FAST5 ரேஃபிள் டிராவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷிபு ஜெய்னம் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர், கடந்த 18 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த குலுக்கலில் இவர் 50 ஆயிரம் அமீரக திர்ஹம்களை வென்றுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 11 லட்சத்து 26 ஆயிரத்து 525 ரூபாய் ஆகும்.
முதலில் இவர் தனது வெற்றியை நம்பவில்லை. இந்த பரிசுத்தொகையானது தனது சுமையை குறைக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை நபர்
இதேபோல அமீரக லொட்டரியில் சென்னையைச் சேர்ந்த சின்னகாவனம் பாலாஜி என்பவரும் வெற்றி பெற்றுள்ளார்.இவர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
எமிரேட்ஸ் MEGA7 ரேஃபிள் டிராவில் 70,000 திர்ஹம்களை சின்னகாவனம் பாலாஜி வென்றுள்ளார் இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 15 லட்சத்து 77 ஆயிரத்து 136 ரூபாய் ஆகும்.
கல்லூரியிலும், பள்ளியிலும் படித்து வரும் தனது பிள்ளைகளின் கல்வி செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்துவதாக சின்னகாவனம் பாலாஜி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |