உயிரோடு இருக்கும் முதல்வருக்கு சடங்கு நடத்தி சிக்கிக் கொண்ட நபர்! எந்த நாட்டில் தெரியுமா?
இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வருக்கு சடங்கு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் இருக்கும் கங்கை நதிக்கரையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை வைத்து, இறந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளை செய்து வந்துள்ளார்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு, அதன் பின் யோட்டி பகுதியில் உள்ள தல்சப்ரா கிராமத்தை சேர்ந்த பிரிஜேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து பண்டிதர்கள் கூறுகையில், பிரிஜேஷ் யாதவ் கங்கை நதிக் கரையில் அமர்ந்து கங்கை பூஜை நடத்தும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதன் பின்னர் அதே நதிக் கரையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படத்தை வைத்து பிண்ட தானம் வழங்கியதாகவும் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை கேட்டுக் கொண்ட பொலிசார், அமைதியை சீர்குலைக்க முயன்றதாக கூறி வழக்குப் பதிவு செய்து கைது செயதனர்.
