பிரித்தானிய கலவரங்களுக்குக் காரணமான வதந்திகளை பரப்பிய நபர்: வழக்கில் எதிர்பாராத திருப்பம்

United Kingdom
By Balamanuvelan Aug 27, 2024 04:38 AM GMT
Report

பிரித்தானியாவில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதல்தாரி புகலிடக்கோரிக்கையாளர் என்றும் இஸ்லாமியர் என்றும் தகவல் பரவியது.

அதைத் தொடர்ந்து, பிரித்தானியா முழுவதும் கலவரம் வெடித்தது. புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த ஹொட்டல்கள் தாக்கப்பட்டன.

பொலிசார் மீதும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதுடன், தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன, பிரித்தானியா கலவர பூமியானது.

அமெரிக்காவில் மன்னர் சார்லஸ் பெயரில் ஒரு ஆடம்பர குடியிருப்பு: என்ன, மன்னருக்கே தெரியாதா?

அமெரிக்காவில் மன்னர் சார்லஸ் பெயரில் ஒரு ஆடம்பர குடியிருப்பு: என்ன, மன்னருக்கே தெரியாதா?

வதந்திகளை பரப்பிய நபர்

இந்நிலையில், தாக்குதல்தாரி புகலிடக்கோரிக்கையாளர் என்றும் இஸ்லாமியர் என்றும் தகவல் பரப்பியது Channel3Now என்னும் பாகிஸ்தான் ஊடகம் என்றும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அந்த ஊடகத்துடன் தொடர்புடையவரான Farhan Asif (32) என்பவரை பாகிஸ்தான் பொலிசார் கைது செய்தனர்.

எதிர்பாராத திருப்பம்

பிரித்தானிய கலவரங்களுக்குக் காரணமான வதந்திகளை பரப்பிய நபர்: வழக்கில் எதிர்பாராத திருப்பம் | Person Spread Rumors That Caused The British Riots

இந்நிலையில், அந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஆம், ஐந்து நாட்கள் Farhan Asifஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தியபின், பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

ஆனால், எதிர்பாராத திருப்பமாக, Farhan Asif இந்த வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி, லாகூர் நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது.

ஜேர்மனிக்கு பல மில்லியன் யூரோக்கள் வருவாய் உருவாக்கும் புலம்பெயர்ந்தோர்: ஆனால்

ஜேர்மனிக்கு பல மில்லியன் யூரோக்கள் வருவாய் உருவாக்கும் புலம்பெயர்ந்தோர்: ஆனால்

பிரித்தானியாவில் கலவரங்கள் வெடிக்கக் காரணமான தவறான தகவல்களை Farhan Asif பரப்பியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள பாகிஸ்தான் பெடரல் விசாரணை ஏஜன்சி, அவரை விடுவிக்கக் கோரியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

மேலும், இந்த தவறான தகவலை முதலில் வெளியிட்டது Farhan Asif இல்லை என்றும், அவர் வேறொரு சமூக ஊடக இடுகையிலிருந்துதான் அந்த செய்தியை copy-paste செய்துள்ளார் என்றும் தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் பெடரல் விசாரணை ஏஜன்சி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US