இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து கவனத்தை ஈர்த்த நபர்
ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சில நாட்களிலேயே நபர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
தொடர்ந்து பின்னடைவு?
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். இதனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்சால்மரைச் சேர்ந்த 38 வயதான ஜலாலுதீன் என்ற நபர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர், தற்போது ஜெய்ப்பூரில் உள்ள ஹரிதேவ் ஜோஷி பத்திரிகை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த ஆகஸ்ட் 11-ம் திகதி அன்று ரூ.15,000 வைப்புத்தொகையுடன் மாநிலங்களவையில் தனது வேட்புமனுவை சமர்ப்பித்து தாக்கல் செய்துள்ளார்.
இவரது அரசியல் அனுபவம் பொருத்தவரை 2009-ம் ஆண்டில் ஜெய்சால்மர் மாவட்டத்தின் அசுதர் பண்டா பஞ்சாயத்திலிருந்து வார்டு பஞ்ச் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, 2013-ம் ஆண்டில் ஜெய்சால்மர் சட்டமன்றத் தொகுதிக்கும், 2014-ம் ஆண்டில் பார்மர் ஜெய்சால்மர் மக்களவைத் தொகுதிக்கும் வேட்புமனு தாக்கல் செய்து இரண்டிலிருந்தும் விலகினார்.
இவர் பல அரசியல் பின்னடைவுகளை சந்தித்தாலும் குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்ற கனவில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வாய்ப்புள்ளது.
அதாவது, ஆவணங்களில் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் சான்றளிக்கப்பட்ட நகலில் பழைய திகதி இருப்பதால், இது தேர்தல் ஆணைய விதிகளின்படி ஏற்றுக்கொள்ள முடியாது. இது, ஜலாலுதீனின் மூன்றாவது பின்னடைவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |