2020ஆம் ஆண்டில் அதிக நன்கொடை கொடுத்த நபர்: பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கணவனும் மனைவியும்!
தொண்டு நிறுவனங்களுக்கு அதிக அளவில் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் ஒரு கணவனும் அவரது முன்னாள் மனைவியும் இடம்பிடித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டில் அதிக நன்கொடை கொடுத்த நபராக முதலிடம் பிடித்திருப்பவர் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்.
அவர், தனது தொண்டு நிறுவனமான Bezos Earth Fund என்ற அமைப்புக்கு 10 பில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்.
பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் வேறு யாருமில்லை, ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கென்ஸி ஸ்காட்.
அவர் 5.7 பில்லியன் டொலர்கள் நன்கொடை கொடுத்துள்ளார். ட்விட்டரின் இணை நிறுவனரான ஜாக் டார்சி 1.1 பில்லியன் டொலர்கள் நன்கொடை கொடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
முன்னாள் நம்பர் 1 கோடீஸ்வரரான பில் கேட்ஸும் அவரது மனைவியும் 157 மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி 13ஆவது இடத்தில் உள்ளனர்.
இந்த பட்டியல், 2020ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நன்கொடையின் அடிப்படையில் மட்டுமே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.