ரூ.1 லட்சத்திற்கு Personal Loan வாங்கினால்.., 4 வருடங்களுக்கு மாத EMI எவ்வளவு?
Personal Loan Interest Rate வங்கிக்கு வங்கி மாறுபடும் நிலையில் எந்த வங்கியில் மிகக்குறைவு என்பதை பற்றி பார்க்கலாம்.
Personal Loan
தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்ற கடனாகும். உங்களுக்கு நல்ல Credit scores இருந்தால் விரைவில் தனிபர் கடன் கிடைக்கும்.
திடீர் செலவுகள்,காப்பீடு செய்யப்படாத மருத்துவச் செலவுகள், வேலை இழப்பால் ஏற்படும் சூழ்நிலைகள் ஆகியற்றால் ஏற்படும் செலவுக்கு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் நாம் கடனை பெறுவது எளிதான விடயம் என்றாலும் அதற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், மாதாந்திர தவணைகளைத் தவறவிட்டால் உங்கள் கடன் கிரெடிட் ஸ்கோர் குறைந்து விடும். இந்நிலையில், குறைவான வட்டி விகிதம் வழங்கும் வங்கிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பந்தன் வங்கி (Bandhan Bank)
பந்தன் வாங்கியானது தனிநபர் கடனுக்கு 9.47 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. நான்கு வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான சமமான மாதாந்திர தவணை (EMI) ரூ. 2,511 ஆகும்.
ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
Axis Bank, Bank of India, Citibank, HDFC Bank IDFC First Bank ஆகிய வங்கிகள் தனிநபர் கடனுக்கு 10.75 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது.
இந்த வங்கியில் நான்கு வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான சமமான மாதாந்திர தவணை (EMI) ரூ.2,572 ஆகும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank)
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது தனிநபர் கடனுக்கு 10.8 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. நான்கு வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான சமமான மாதாந்திர தவணை (EMI) ரூ.2,575 ஆகும்.
எஸ்.பி.ஐ (SBI)
பாரத ஸ்டேட் வங்கியானது தனிநபர் கடனுக்கு 11.15 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. நான்கு வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான சமமான மாதாந்திர தவணை (EMI) ரூ.2,592 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |