தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! பயணித்தவர்கள் அனைவரும் பலி
தென் அமெரிக்கா நாடான பெருவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஸ்னா 207 ரக விமானம் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரெய்ச் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியதாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்ட வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 3 நெதர்லாந்து, 2 சிலி சுற்றுலா பயணிகள் உட்பட பெரு நாட்டைச் சேர்ந்த 2 விமானக் குழுவினர் என மொத்தம் 7 பலியானதாக பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தரையில் விழுந்து நொறுங்கிய பிறகு விமானம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.