பெருவில் வீடொன்றில் பயங்கர தீ: 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
பெருவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வீடொன்றில் பயங்கர தீ
பெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் என மொத்தம் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
லீமாவின் லா விக்டோரியா மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த கோர சம்பவமானது அரங்கேறியுள்ளது.
குடிமை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த எரியக்கூடிய மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனங்கள் காரணமாக தீ மிகவும் வேகமாக பரவியது என தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதியை பெரு ஜனாதிபதி கெய்கோ கியூமோரி பார்வையிட்டார்.
தீ விபத்துக்கான மூல காரணத்தை கண்டறிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்களை முழுமையாக கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |