தளபதியின் படுகொலை.,நாங்கள் உக்ரைனை தாக்கியது சரிதான்! கொந்தளித்த புடின் செய்தித் தொடர்பாளர்
ரஷ்ய தளபதியின் படுகொலை மூலம் உக்ரைன் பயங்கரவாத முறைகளில் இருந்து பின்வாங்கவில்லை என டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
தளபதி படுகொலை
மாஸ்கோவில் தளபதி இகோர் கிரில்லோவ் (54) படுகொலை செய்யப்பட்டது ரஷ்யாவை அதிர வைத்துள்ளது. இதுதொடர்பில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 29 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கிரில்லோவ்வின் படுகொலை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கிரெம்ளின் குற்றம்சாட்டியுள்ளது.
யார் உத்தரவிட்டது
மேலும், புடினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், "கீவ் ஆட்சி பயங்கரவாத முறைகளில் இருந்து பின்வாங்கவில்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு யார் உத்தரவிட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. உக்ரைன் மீது 2022யில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது சரிதான் என்பதற்கு கிரில்லோவின் மரணம் ஒரு சான்று" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சட்ட அமலாக்க முகவர் ஆகியோரின் விரைவான பணிகளை அவர் பாராட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |