தனது 100வது போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்! மிரட்டிய 41 வயது பந்துவீச்சாளர் (வீடியோ)
பிக் பாஷ் லீக் தொடர் போட்டியில் பீட்டர் சிடில், தனது 100வது போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.
மெல்போர்ன் ஸ்டார்ஸ்
BBL 2025-26 தொடரின் 27வது போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.
image: Getty Images
தலைமுடியைப் பிடித்து இழுத்த இங்கிலாந்து வீரர்! Red Card கொடுத்து வெளியேற்றிய நடுவர்..பரபரப்பான ஆடுகளம்
image: Getty Images
முதலில் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
image: Getty Images
image: Getty Images
அணித்தலைவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 33 ஓட்டங்களும், பிளேக் மேக்டொனால்ட் 33 ஓட்டங்களும் எடுத்தனர். பென் ட்வர்ஷுய்ஸ் 4 விக்கெட்டுகளும், ஜேக் எட்வார்ட்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
image: Getty Images
பீட்டர் சிடில்
அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் விளாசியது. இதனால் அனுபவ வீரர் பீட்டர் சிடில் (Peter Siddle) முதல் ஓவரை வீச வந்தார்.
Oh yeah, Peter Siddle!
— KFC Big Bash League (@BBL) January 8, 2026
In his 100th BBL match, he gets a wicket with his first ball. #BBL15 pic.twitter.com/hyGefnWX5d
image: Getty Images
அவரது முதல் பந்திலேயே அணித்தலைவர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் (12) lbw ஆகி ஆட்டமிழந்தார். சிடில் (41) தனது 100வது பிக் பாஷ் போட்டியில் இந்த விக்கெட்டை வீழ்த்தியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
image: Getty Images
எனினும், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
image: Getty Images
image: Getty Images
அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 35 (25) ஓட்டங்களும், லச்லன் ஷா (Lachlan Shaw) 24 (14) ஓட்டங்களும் விளாசினர். ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
image: Getty Images
image: Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |