நிர்வாக கட்டுப்பாட்டிற்கு கீழ் செல்லும் பெட்ரோஃபேக் நிறுவனம்: 2000 பேரின் வேலைக்கு ஆபத்து
பெட்ரோஃபேக் நிறுவனம் பிரித்தானியாவின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோஃபேக் நிறுவனம்
வடக்கு கடல் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி சேவை நிறுவனமான பெட்ரோஃபேக்(Petrofac) நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு பிரித்தானியாவின் சட்ட நடவடிக்கையான நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாக குழு, நிர்வாகத்தை கண்காணிக்க ஏற்கனவே Teneo என்ற சிறப்பு நிர்வாக மறுசீரமைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த மறுசீரமைப்பு அமைப்பானது திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் கையகப்படுத்தி நிர்வகிக்கும் செயல்முறை தான் இதுவாகும். இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக நிறுவனத்தின் கடனாளிகளை பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்படுகிறது.
வேலையிழப்பு அபாயம்

பெட்ரோஃபேக் நிறுவனத்தில் உலகளவில் சுமார் 7,300 பணியாளர்கள் வேலையில் உள்ள நிலையில், மறுசீரமைப்பு செயல்முறையானது தாய் நிறுவனமான பெட்ரோஃபேக் லிமிடெட் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
இதனால் ஸ்காட்லாந்தில் உள்ள 2000 பணியாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |