ஷேக் ஹசீனா நேரலை., ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹாசனின் மூதாதையர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தங்கியுள்ள வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து ஷகிப் அல் ஹாசன் காணொளி வாயிலாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹாசனின் மூதாதையர் வீட்டில் உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 8.45 மணிக்கு இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஷகிப் அல் ஹாசனின் வீடு சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தாக்குதல் தொடர்பாக அவாமி லீக் வெளியிட்ட அறிக்கையில், நவ பாசிசம் வங்கதேசத்தி சூழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
காணொளி வாயிலாக அவரது நாட்டு மக்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனநாயகத்தை மீட்கும் முயற்சியில் என்னுடைய கைது நடவடிக்கை அல்லது மரணத்தை கூட எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் டிசம்பரில் நிச்சயம் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |