கொரோனா தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு பக்கவிளைவு! அமெரிக்க CDC முக்கிய தகவல்
ஃபைசர் தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு பெரும்பாலும் லேசான பக்கவிளைவுகள் ஏற்படுவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸ் போட்ட பிறகு சில குழந்தைகளுக்கு ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிற உடல் ரீதியான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக CDC தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தடுப்பூசி போட்ட 5-11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 11 பேருக்கு myocarditis என்றழைக்கப்படும் ஒருவித இதய பிரச்சனை ஏற்பட்டதாக CDC-க்கு அறிக்கை கிடைத்துள்ளதாம்.
11 பேரில் 7 பேர் குணமைடந்துவிட்டனர், 4 பேர் குணமடைந்து வருவதாக CDC தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 5-11 வயதுடைய குழந்தைகளுக்கு சுமார் 8.7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 5-11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஃபைசர் ஆகும்,.
கடந்த ஆக்டோபர் மாதம் ஃபைசர் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த அமெரிக்க ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.