ஈரான் போர்: பாராசிட்டமால் மாத்திரை விலை கணிசமாக அதிகரிப்பு
ஈரான் போரால், பிரித்தானியாவில் பாராசிட்டமால் முதலான மருந்துகளின் விலைகள் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.
பாராசிட்டமால் மருந்தின் விலை அதிகரிப்பு
இங்கிலாந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி மருந்துகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக மருந்தகங்கள் (pharmacies) தெரிவித்துள்ளன.

மருந்தக ஊழியர்கள், பாராசிட்டமால் மாத்திரைக்கு பிப்ரவரி மாதத்தைவிட 20முதல் 30 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பல மருந்தகங்களில் ஆஸ்பிரின் முதலான சில மருந்து வகைகள் காலியாகிவிட்டதாகவும் தேசிய மருந்தக கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
ஈரான் போரால், பெட்ரோல் மற்றும் டீசல் அதிகரித்துள்ளதால், போக்குவரத்துச் செலவு மற்றும் மருந்து உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன.
அத்துடன், பல மருந்துகள் விமானம் மூலம் வரும் நிலையில், விமான கட்டணங்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதுடன், பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் நிலையில், அவற்றின் வரத்து குறைந்துள்ளதும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |