14 வயது பள்ளி சிறுவனின் இதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு: அமெரிக்க பள்ளியில் மீண்டும் தாக்குதல்
அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் உள்ள பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு.
14 வயது சிறுவன் உயிரிழப்பு, நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 14 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பென்சில்வேனியாவின் பிலடெல்பியா (Philadelphia) நகரத்தில் உள்ள ராக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் (Roxborough High School) அமெரிக்க கால்பந்து போட்டியின் பயிற்சியை முடித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் மீது பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
பள்ளியின் நுழைவு வாயிலில் செவ்வாய் கிழமை மாலை 4:42 மணிக்கு நடந்த சுமார் 69 வெடிப்புகள் கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதல் 14 வயது இளைஞன் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி மாலை 5.10 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடைபெற்றதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இந்த துப்பாக்கி சூட்டினை இரண்டு துப்பாக்கிதாரிகள் இணைந்து நடத்தி இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு; "என் அப்பா ராஜா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்" சக மாணவருக்கு இளவரசர் ஜார்ஜ் பதிலடி!
இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் இதுவரை கைது செய்யாத காவல்துறை, துப்பாக்கி சூட்டினை நடத்திய துப்பாக்கிதாரிகள் தாக்குதலை நடத்திவிட்டு கால்நடையாக தப்பிச் சென்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Image: NBC Philadelphia