அரசியலிருந்து விலகுகிறேன்! வெளிச்சத்திற்கு வந்தது பிலிப்பைன்ஸ் அதிபரின் திடீர் முடிவுக்கு பின்னால் இருக்கும் பலே திட்டம்
அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோட்ரிகோ டுட்ரேட், நான் அரசியலிருந்து விலகுகிறேன் என அறிவித்தார்.
பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பின் படி, ஒருவர் ஜனாதிபதியாக ஒரு முறை மட்டுமே அதாவது ஆறு ஆண்டு காலம் வரை மட்டுமே பதவி வகிக்க முடியும் என வரம்பு உள்ளதால் ரோட்ரிகோ டுட்ரேட் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர்.
எனினும், ரோட்ரிகோ டுட்ரேட் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாபதிபதி பதவிக்கான தேர்தலில், ரோட்ரிகோ டுட்ரேட் தனது மகள் Sara Duterte-Carpio-ஐ களமிறக்குவார் என அரசியல் விமர்சிகர்கள் சந்தேகிக்கின்றனர்.
தந்தைக்குப் பதிலாக Davao மேயராக நியமிக்கப்பட்ட Sara Duterte-Carpio, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்தார்.
ஏனென்றால், இருவரில் ஒருவர் தான் 2022ல் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என தானும் தந்தையும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.
தற்போது, ரோட்ரிகோ டுட்ரேட் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால், 2022ல் நடக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் Sara Duterte-Carpio போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
அதேசமயம், ரோட்ரிகோ டுட்ரேட் மனம் மாறி துணை ஜனாதிபதி பதிவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.