பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலநடுக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
செவ்வாய்க்கிழமை மாலை மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியை ஒட்டிய கடற்கரை பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது, 33,000 மக்கள் வசிக்கும் கலாப்பே(Calape) நகரத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆரம்பகட்ட தகவல் படி, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது வேறு குறிப்பிட்ட சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
6.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே சமயம், லெய்ட், செபு மற்றும் பிலிரான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடற்கரையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |